இசையென்னும் கவிதை- எண் 12 எழு பிறவி எடுத்தாலும் தீராதம்மா
இசையென்னும் கவிதை: எண் 12
எழு பிறவி எடுத்தாலும் தீராதாம்மா
ஒரு தாயினை அடிப்பது, பெற்ற அன்னையாக இருக்கட்டும் மற்றவர்களின் அன்னையாக இருக்கட்டும், அது பஞ்சமாபாதங்களில் ஒன்று. எழுபிறப்பிலும் அதற்கு பரிகாரமில்லை இதனை இசையாக காண YOUTUBE https://youtu.be/jG8ivogi6bU
இசையென்னும் கவிதை: எண் 12
எழு பிறவி எடுத்தாலும் தீராதம்மா
பண்பறியா பதர் இங்கே
வெறி ஆட்டம் போடுதம்மா
உயிர் கொடுத்த தெய்வத்தை
மதிகெட்டு வதைக்குதம்மா
உதிரத்தைபாலாய் ஊட்டியஅன்னையின்
உதிரம் உறைய செய்கிறது
மார்பினிலே சுமந்த தாயை
நெஞ்சு பதற உதைக்குதம்மா
நாளை தனக்கும் இக்கதி எனஅறியாது
பாவம்மேல் பாவத்தை சுமத்துகிறது
எழுபிறவி எடுத்தாலும் இனிஇந்த
பாவம் எந்நாளும் தீராதம்மா