மீண்டும் வேண்டும் ,

அடித்தாலும் மிதித்தாலும்
ஊமையானான் அன்று தமிழன்
ஆனாலும்
அந்நியன் கொட்டம் அடங்கிடவில்லை
இனியும் வேண்டாம் கொதித்திடு தமிழா என
தட்டி எழுப்பிய தமிழன் தமிழின் தலைவனே
அப்போதுதான் தமிழன் தலை நிமிர்ந்து
தமிழை நோக்கினான்
தமிழ் நசுங்குவதையம் தமிழன் நசுக்கப் படுவதையும் ,
அதுவரை நடந்தது யாவும் பொய்யென்றான்
இனிமேல் உலகில் தமிழன் மெய்யென்றான்
கற்றவர் உற்றவர் பெற்றவர் பெரியவர்
எல்லோரும் அவன் செயலில் அவன் சொல்லில்
தடம் மாறாது அணிவகுத்தனர்
அவன் கோடு போட மக்கள் அவ்வழி சென்றனர்
நாகரீகம் சிறிதும் பிசகாது
நற்செயல்கள் நலிவின்றி துல்லியமாய்
சிறப்புடன் செயலாற்றி வந்தனர் தமிழ் மக்கள்
சாதி எங்கே/ மதம் எங்கே /
எல்லோரும் ஓர் இனம் ஓர் மதம் என பேதமின்றி
தமிழும் தமிழ் மக்களும்
யாருக்கும் யாரும் எதிரிகள் இல்லை
அமைதியான கட்டுக் கோப்பான வாழ்கை
இயல்பான எண்ணங்களும் அன்பான மக்களும்
மீண்டும் மீண்டும் வேண்டும் அந்த அமைதியின் வாழ்கை
வருமா மீண்டும் வருமா தமிழா /
தமிழனுக்கு என்றும் இல்லை தோல்வி
மனித நேயம் மிக்க மகத்தானவன் தமிழன்
வாழவைப்பவனும் தமிழன்
வாழத் துடிப்பவனும் தமிழனே

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Jun-18, 11:10 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 236

மேலே