தாய்மையிலும் வேஷம்

தாய்மை சிறப்பென்று காலில் விழத் தயாரானேன்.
குழந்தைகள் சற்றே வளர தாய்பால் கலப்படமாகக் கண்டேன்.
பத்து திங்கள் சுமப்பதும், வேதனை அனுபவித்து பெற்றெடுப்பதும் தான் தாய்மையா?

இதுவே தாய்மை என்று மனிதர்கள் வாதாடலாம்.
இதைவிட மேலான தாய்மை உணர்வை நான் விலங்குகளிடம், பறவைகளிடம் கண்டேன்.

குடும்பம் என்பது பூந்தோட்டமென்றால் அதில் பூக்கள் பூக்கும் செடிகள் நாங்கள்.
பல வண்ண பூக்கள் தருவோம்.
எங்களெண்ண பூக்கள் ஒரேமாதிரியானவை தான்.
என்று சொல்ல ஆசை தான்.
என் குடும்பத்தில் நான் என்றுமே தனியொருவன் தான்.
அன்பு ஏங்கினேன்,
அம்பால் இதயத்தை குத்திவிட்டார்கள்.

நீங்கள் சற்று விலகியே இருங்கள்.
இதயம் காயம்பட்ட இது மிருகமானது.
நெருங்கி ஏமாற்றினால் அடித்து சாப்பிட்டுவிடும்.
அதிகப்பிரசங்கியிடம் பேசாதீர்கள்.
எதையும் உடைக்கும் புத்தி பலத்தைவிட எதையும் உருவாக்கும் மனபலம் உருவாகட்டும்.

கூட்டமாகக் கும்மியடிக்கும் கூட்டங்களைக் கண்டாலே அருவருப்பு.
ஏமாற்றி பணம் பிடுங்க ஆண் பெண் பேதங்களின்றி பேய்கள் நடமாடுகின்ற இந்த கயவர் உலகில் இயற்கையோடு வாழ இயலாத நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக மயக்கத்தில் பெரிய தவறுகளைச் செய்ய துணிகிறீர் பணத்திற்காக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jun-18, 10:41 am)
பார்வை : 1821

மேலே