மோனாலிசாவின் புன்னகை

விழிகளில் மயக்கம், இதழிலே ரகசியம்
வரைபடமாயினும் வசப்பெடுத்தினாயே
பனிரெண்டு வருடங்களேன் எடுத்து கொண்டாய், உன்
புன்னகையில் மர்மத்தை முடித்து வைக்க

கலைஞனின் படைப்பாய் மாறி விட்டாய்
கலைதேவியை காலம் கடக்க செய்தாய்
படைத்தவன் பெயரையோ வாழ வைத்தாய்
படைப்பிலே மகுடமின்றி அரசியாநீர்

மனதை மயக்கின புன்னகையை
மகிழ்வுடன் எங்கே ஒளித்து வைத்தாய்
கலைஞனின் கைவண்ணக்கோடினிலோ
காலத்தால் படிந்து திரண்ட மாசினிலோ

உதடுகள் மட்டுமே பார்க்க நேர்ந்தால்
உன் விழிகளில் சோகம் மறைந்து போகும்
தேங்கும் உன் கண்ணீரெய் பார்த்து விட்டால்
தொலைந்திடும் மௌனமாம் புன்முறுவல்

உன் சிரிப்பென ஓவியனின் ரசனையாலோ
தன் அழகிலே மதியிழக்கும் ஆணவமோ
பெண்ணாய் பிறந்தேனென பெருமயிலோ
காலங்கள் கடந்தும் ஏன் விளங்கவில்லை

புருவமிழந்த கண்களினால் ஏன்
புலனாய்வு செய்கிறாய் என் மனதை
பருவமடைந்தும் புரியவில்லை, நீ
பார்வையால் சொன்ன ரகசியவேதம்

வியப்போடு ரசிகையாய் மாறி விட்டேன்
தயக்கமின்றி ஒன்று கூறுவேனே
ஏளனம் செய்யும் உதடுமில்லை, அவை
ஆணவத்தின் ஒப்புதலுமில்லை

எழுதியவர் : சந்தியா (25-Jun-18, 10:14 am)
சேர்த்தது : சந்தியா
பார்வை : 59

மேலே