வரையறைகளும் வரைமுறைகளும்

ஒப்பீடுகள் வரையறைகளாகின்
எல்லைகள் வரைமுறையாகும்!
எதனின்பால்! எதன்கொள் கேள்விகூற்று!!!

போட்டிகளின் வரையறை
போற்றுதலில் வரைமுறைப்படும்!

ஏழ்மையின் வரையறை
ஏளனத்தில் வரைமுறைப்படும்!

காமத்தின் வரையறை
கலவியில் வரைமுறைப்படும்!

மனதின் வரையறை
மார்க்கத்தில் வரைமுறைப்படும்!

இயக்கத்தின் வரையறை
ஆற்றலில் வரைமுறைப்படும்!

அன்பின் வரையறை
வெளிப்பாட்டில் வரைமுறைப்படும்!

ஆசையின் வரையறை
அனுபவத்தில் வரைமுறைப்படும்!

தலைமையின் வரையறை
முடிவுகளில் வரைமுறைப்படும்!

அரசியலின் வரையறை
ஆதிக்கத்தில் வரைமுறைப்படும்!

கவிதையின் வரையறை
கருவில் வரைமுறைப்படும்!

உண்மையின் வரையறை
உணர்ச்சிகளில் வரைமுறைப்படும்!

ஆன்மீகத்தின் வரையறை
நம்பிக்கையில் வரைமுறைப்படும்!

மகிழ்ச்சியின் வரையறை
நீடித்தலில் வரைமுறைப்படும்!

தொழிலின் வரையறை
செயற்பாட்டில் வரைமுறைப்படும்!

நற்பேற்றின் வரையறை
அனுபவித்தலில் வரைமுறைப்படும்!

கனவுகளின் வரையறை
நிறைவேறுதலில் வரைமுறைப்படும்!

கல்வியின் வரையறை
மாற்றத்தினால் வரைமுறைப்படும்!

ஒழுக்கத்தின் வரையறை
கட்டுப்படுதலில் வரைமுறைப்படும்!

துன்பத்தின் வரையறை
இழப்பினில் வரைமுறைப்படும்!

சுயத்தின் வரையறை
சுயநலத்தில் வரைமுறைப்படும்!

என் வரையறை
எண்ணத்தில் வரைமுறைப்படும்!

நின்னில் என் வரையறை
நன்னில் வரைமுறைப்பட
என்னில் ஓர் ஏக்கம்!

தன்னிலை விளக்கவோர் வரையறை
இதுவே என் வரைமுறை!

எழுதியவர் : சிவக்குமார். ந - பவானி (25-Jun-18, 9:12 am)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 410

மேலே