உழவுத் தொழில்

#உழவுத்_தொழில்

பயிர் தொழில்
இல்லையென்றால்
உயிர் தொழில்
உலகில் ஏது?

கணினி கற்றல்
சிறப்பென்பார்கள்...
கலெக்டர் ஆவது
புகழென்பார்கள்...
டாக்டர் ஆவது
லட்சியம் என்பார்கள்...
வக்கீலாவது
வாழ்க்கை என்பார்கள்...
பசி ஒன்று வந்தால்
இவர்கலெல்லாம்
எதை எடுத்து உன்பார்களோ?

ஏழை எளியவர்கள்
வயலில் குனியவில்லை என்றால்
நம் நாடு
உலகில் நிமிர்ந்திடுமா?

உழவர்கள் எல்லாம்
கால்பகுதி ஆடைகளையே
உடுத்துகிறார்களே...
மீதி ஆடையை
நம் தேசத்தின் மானத்தைக்
காக்க கொடுத்து விட்டார்களோ?

பயிரின் நுனியில்
தானியங்கள் விளைவது
எல்லோருக்கும் தெரியும்...
ஆனால்
அதன் வேரில்
நமது
பண்பாடு
கலாச்சாரம்
நாகரீகம்
வளர்ந்திருப்பது
எத்தனைப் பேருக்குத் தெரியும்?

உழவனின் சிறப்பைச் சொல்ல
" பசி வந்தால் பத்தும் பறந்து போகும் " என்ற
பழமொழி போதாதா....
பக்கம் பக்கமாக
எழுதிடவும் வேண்டுமா?

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

வாட்ஸ்ஆப் நெம்பர் 8883661977

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Jun-18, 12:34 pm)
பார்வை : 136

மேலே