வெற்றி பெறுவதன் நோக்கம் - என் பார்வையில்

' வெற்றி ' ஓர் அழகான சொல் .
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது..
- சொல்ல வேண்டிய சொல் ' வெற்றி ' .
- சுவைக்க வேண்டிய சொல் ' வெற்றி '
இது ஓர் ஆரோக்கியமான போதை..!!
ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும் ..!!

நம் வாழ்வின் இலக்குகளை நாம் அடையும்போது ..!!
வெற்றியை உணர்கிறோம்..!!

தாயின் கருவறையில் முட்டி மோதி வெளியில் வந்து ..!!
- உலகைக் காணும் போது ..!!
பசிக்கு அழும் வேளையில் ..!!
- தன தாயிடம் தாய்ப்பால் கிடைக்கும் போது ..!!
பள்ளியில் ஆசிரியரிடம் ..!!
- ** நட்சத்திர குறி வாங்கும் போது ..!!
நண்பர்களுடன் விளையாட்டில் ..!!
- முந்தி சென்று முந்தும் போது ..!!
பருவ வயதில் பருக்களுக்காக காத்திருந்து ..!!
- வந்தவுடன் அதை எண்ணும் போது ..!!
பெண்ணின் வாசம் யோசிக்கும் வயதில் ..!!
- அவளின் அருகே அமர்ந்து படிக்க இடம் கிடைத்த போது ..!!
முதல் பணியில் முதல் சம்பளம் வாங்கிய போது ..!!
- வாங்கிய சம்பளத்தில் தன் தாய் தந்தைக்கு அன்பளிப்பு கொடுத்த போது ..!!
ஊரார் முன்னிலையில் திருமாங்கல்யத்தை ..!!
- மனைவியின் கழுத்தில் கட்டிய போது ..!!
நம் குழந்தை நம்மை..!!
- 'அப்பா ' என அழைத்த போது ..!!
சமுதாயத்தில் குடும்பஸ்தனாய் செல்வந்தனாய் ..!!
-ஆனா போது ..!!
அறுபது வயதிற்கு பின்பும் ..!!
- அரோக்கியமாய் வாழ முடியும் போது ..!!
வயதானவுடன் பிள்ளைகளின் அரவணைப்பில் ..!!
- இளைப்பாறும் பாக்கியம் கிடைக்கும் போது ..!!
இறுதியில்
முதுமையடைந்தவுடன் மூச்சை நிறுத்தும் போதும்..!!
நாம் வெற்றியடைகிறோம் ..!!

" மூச்சு விட ஆரம்பித்த நாள் முதல் ..!!
மூச்சை முழுவதுமாய் நிறுத்தும் நாள் வரை ..!!
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ..!!
வெற்றியை நோக்கியே ..!! "

நன்றி . வணக்கம் .

- சுதாரெங்கநாதன்

எழுதியவர் : சுதாரெங்கநாதன் (27-Jun-18, 12:03 pm)
சேர்த்தது : Sudharenganathan
பார்வை : 91

மேலே