பன்றி புராணம்

உடல் பருத்து உருவம் அருவருத்து
உழன்று சேற்றில் உறும்பித் திளைத்து
உயிர் கழிவுகளை உகந்துண்டு கொழுத்து
உலகமே வெறுக்க உலவுபவை பன்றியினம்

பசிபிக் தீவு பழங்குடி மக்களுக்கு
பல்லாண்டு பன்றியே புனித விருந்து
பன்றி மாமிசம் இஸ்லாமில் ஹராம்
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் யூதர்கக்கு அவத்தம்

பந்துலகை பாயாக்கி வதைத்த இரணி யாக்ஷனை
பரந்தாமன் வதம் செய்தான் வராக அவதாரத்தில்
எள்ளி பிறர் நகையாட இழிந்து திரிந்தவை
பள்ளி கொண்ட பரந்தாமனுக்கு தன்னுரு தந்தவை

பாற்கடல் விடமுண்ட பாவநாசன் அடிமுடிகாண
பிரம்மனுடன் போட்டியில் பன்றிவடிவெடுத்தார் விஷ்ணு
பிரளயம் காலத்தில் உயிர்க்கோளம் மீட்டதாய்
பன்றி புராணம் பகர்ந்திடும் பிரம்மவேதம் இவை

பருவம் அடைந்தபின் ஆண்டிற்கு மும்முறை
பத்திற்கும் குறையாது குட்டிகள் ஈனும்
பண்ணை அமைத்து பக்குவமாய் வளர்ப்பின்
பன்மடங்கு பலன்தந்து வருவாயை கூட்டும்

ஆபத்தான ஆந்த்ராக்ஸ் பன்றிகளால் பரவுவதில்லை
பன்றிகள் கடத்தும் டிரிச்சினோஸிஸால் ஒருபோதும் இறப்பில்லை
பதமாக சமைத்துண்டால் பாதகம் ஏதுமில்லை
புரதம் கொழுப்பு தந்திடும் நார்சத்து சிறிதுமில்லை

இயற்கையில் ஏதும் வீணில்லை விரைந்து பெருகின்
கலகலத்துப் போகும் இயற்கையின் சமநிலை
அண்டி வாழும் இவ்வுயிரை நேசிப்போம்
அசுத்தமற்ற சூழலில் பேணி வளர்ப்போம் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Jun-18, 1:42 pm)
பார்வை : 194

மேலே