நான் விரும்பியதெல்லாம்

நெல்லின் மனம் வீசும் வாடைக்காற்று
தென்னை கீற்றுகள் உரசும் சிணுங்கல் சத்தம்
வாய்க்காலில் ஓடும் நீரின் கலகலப்பு
இதன் நடுவில் கூரை வீடு
வீட்டின் பின்னே தெரியும் கரியமலை
என்மனம் மயக்கிய மாங்கனியின் ஊசலும்
மாங்கனி முகம் பார்க்கும் கிணறும்
சலிப்போடு வந்தால் சிரிக்கக் கற்றுத்தந்த தண்ணீர்த்தொட்டியும்
பொழுதை போக்கவும் இயற்கையை ரசிக்கவும்
வயலிலே விளையாடி புல்லிலே புரள , என்னோடு ஆட்டுக்குட்டிகளும்
தாகம் தணித்த குட்டைத் தென்னையின் கொடையும்
அறுசுவையும் அன்பான உறவுகளும் தான்
நான் விரும்பியன :
மானுடனான காதல் மட்டும் அழியாததல்ல
இயற்கை உடனான காதல் என்றுமே சிறக்கும்
இயற்கை நம்மை கருவாக்கி உருவாக்கியது
நாம் கரியாக்கி உயிர்நாடி அறுத்து
செய்நன்றியும் மறந்தோம் ; நன்றி செய்யவும் மறந்தோம் !