முன்னெப்பொழுதும் இப்படி இருந்ததில்லை

முன்னெப்பொழுதும்
இப்படி இருந்ததில்லை
.
காண்கின்ற காட்சியெல்லாம்
களவாடுகிறது என் ரசனைகளை
.
செய்கின்ற செயல்களெல்லாம்
சிலிர்ப்பூட்டுகிறது என் உடலினை
.
படிக்கின்ற பாடல்களெல்லாம்
பரவசமூட்டுகிறது என் சிந்தையினை
.
கேட்கின்ற சப்தங்களெல்லாம்
இசைகளாகிறது என் காதினில்
.
தீண்டுகின்ற காற்றெல்லாம்
தென்றலாகிறது என் மேனியில்
.
உன் பார்வையின்
பரிசுத்தநேசம் என் மேல்
வீசிவிட்டு சென்றதிலிருந்து
.
முன்னெப்பொழுதும்
இப்படி இருந்ததில்லை

எழுதியவர் : வெங்கடேஷ் (27-Jun-18, 5:04 pm)
பார்வை : 137

மேலே