தனிமை இனிமை தான்

கடந்து வந்த பாதையின் நினைவுகளில் உறைந்தேன்
அணை உடைக்கும் வெள்ளம் பாேல் உப்புநீர் சுரக்கிறது
எதை இழந்தேன் என்று பட்டியிலிட்டேன்
குடும்பம் உறவு, நட்பு, காதல் என்று வகையிட்டால்
"காதல்" காெஞசம் அதிகமாக வலித்தது
தனிமையின் கண்ணீராேடு நெருக்கமாக உறவாட
இன்னும் இழக்காமிலிருப்பது தனிமை மட்டும் தான்.
எத்தனை கடந்தும் பயணம் முடியவில்லை
எத்தனை இழந்தும் பாதை தெரியவில்லை
அத்தனையும் பெறுமதியற்றதாய்
வெறுமையாகி விட்டதால் தானாே
இன்னும் பயணம் தாெடர்கிறது
தனிமையில் தான் நினைவுகள் நெருக்கமாகிறது
தனிமை எப்பாேதும் இனிமை தான்..