பெண் துயர்

உயிரை இழுத்து உதிரமும் உதிர்கிறது
வயிற்றுத் துடிப்பு அதிகம் இதயத்தைவிட
பூமி உருண்டையோடே அவளும் சுழல்கிறாள்
வலியில் வாயடைத்து போர்வைக்குள் சுருள்கிறாள்
கால்கள் கடும் வலியால் மடிந்துபோகின்றன
மார்புக்குமேல் வலியில்லை மனமே துடிதுடிக்க மடிகிறது
இடைஎலும் பிரண்டு வீங்கியதாய் அறிகிறாள்


கனத்த மனதோடு கவலை உரைக்காது கல்லாகிறாள்

வலிஉணரா மாக்கள் மனதை வதைக்கிறார்கள்


வலிஉணராது போனாலும் ,வலிஉண்டாக்காது இருப்போம்

எழுதியவர் : கயல் அமுது (29-Jun-18, 5:30 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 573

மேலே