புகையிலை புகைக்கையிலே

மனிதா!

புகையிலையை வாயில் துறுத்தி
உனது வாழ்வினை மரண வாயிலில் நிறுத்திக்கொள்ளாதே!

புகையை விட்டு நீ புகையாகிப் போவதோடு
உன் சுற்றத்தாரையும் புகைக்கூண்டில் பூட்டாதே !

புகையிலையை மென்று சுவைக்கையில்
மெல்ல மறந்து போகும் உலகம்

நாளை உன்னையும் மறந்து போகும் இவ்வுலகம்
நினைவில் கொள்


புகையிலையோடு உறவாடுவதும்
மரணத்தின் மடியில் தலை சாய்வதும் ஒன்றுதான்


புகையிலையைப் புறக்கணிப்போம் !
நலமுடன் உறவுகளோடு வாழ்வோம் !

எழுதியவர் : கயல் அமுது (29-Jun-18, 5:01 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 157

மேலே