திருடாதே
அடுத்தவரை அபகரித்தப் பொருளனைத்தும் ஓர்நாளில்
=அழிந்து போகும்
எடுத்தவரின் மனம்தவிக்க ஏற்றமெனக் கொண்டதெல்லாம்
=இழிவே யாகும்
படுத்துவிடும் காலமதில் பார்ப்பதற்கு யாருமில்லாப்
=பதைப்பில் போட்டு
நடுத்தெருவில் இருக்கும்வழி வகைசமைக்கும் திருட்டைவிட்டால்
=நலமே யாகும்