காதல் வாழ்வு
பூட்டிவைத்த வீட்டினிலே பொன்னைத் தேடப்
=புகுந்துவிட்ட திருடனைப்போல் பதுங்கிக் கொண்டு
காட்டிக்கொள் ளாவகையில் காதல் செய்யும்
=கன்னியரின் கள்ளத்தனம் கண்கள் மூலம்
பூட்டுடைத்து நெஞ்சகத்துள் புகுந்து கொண்டு
=போட்டுவிடு மாலையெனப் போடும் சட்டம்
மாட்டிக்கொண் டுவிழிக்க மணவாழ் வென்னும்
=மாகுழிக்குள் வீழுகின்றோம் மாந்தர் நாமே!

