ஏங்கிய உயிர்

நீந்திச் சென்ற தென்றலும்
என்னை
நிம்மதி யிழக்க வைத்தது.....

காலம் காலமாக - எனக்கு
உயிர் பிச்சை யளித்த மோட்டர்களும்
மூலையில்
முடங்கிப் போனது...........

ஈரத்துளிகள்
இருகிவிட்டது.......

வயிற்றுப்பசி
வாழ்க்கையின் இறுதிக் காலத்தை
நிர்ணயம் செய்யத் துடிக்கிறது.......

இதற்குத்தான்
என்னை விதைத்தாயா?
இதற்குத்தான்
என்னை வளர்த்தாயா?
இப்போது
கருவுற்று மொட்டாகி நிற்கிறேன்.....

யாரை நம்பி நான் வாழப்போகிறேன்?
என்னை முத்தமிட வரும் - அத்தேனிக்களுக்கு
நான் என்ன சொல்லப்போகிறேன்..........

கருணையில்லா
கருமேகங்களுக்கும்
ஏமாற்றிப்போகும்
வெண்ணிற மேகங்களுக்கும் - என்னால்
சாபம் கொடுக்கவா முடியும்............

கரு
கருகுகிறது....

ஒவ்வொரு இலைகளும்
இறந்து வீழ்கிறது..........

ஆனால்
இன்றும் நீந்திச் செல்கிறது
அத்தென்றல்..............................................

எழுதியவர் : கவியரசன்,மு. (1-Jul-18, 8:41 pm)
Tanglish : yengiya manam
பார்வை : 51

மேலே