சின்னச்சின்ன மழைத்துளி
சின்ன சின்ன மழைத்துளி
......சேர்த்து வைத்தால் வெள்ளவெளி
மாதம் மும்மாரி அன்று
......காத்துக்கிடக்கும் கண்கள் இன்று
முத்து முத்து மழைத்துளி
.......சேர்த்து வைக்க நல்லத்துளி
கிடைப்பதை கடலில் சேர்த்துவிட்டு
......பின் வாட வருவது கண்ணீர்த்துளி
வறட்சியில் வாய்பிளக்கும் வயல்வெளி
......தாகம் தீர்க்க வர வேண்டும் தண்ணீர்த்துளி
மண் மணக்க மழைத்துளி
......மகிழ வைக்கும் மழைத்துளி
சிரிக்க வைக்கும் மழைத்துளி
.......சிந்தித்து சேர் சின்னச்சின்ன மழைத்துளி.......
-கலைப்பிரியை