தாலி
மணமகளை அலங்கரித்தப்
பட்டுப்புடவையோ
பல ஆயிரமாம்..
அசந்து தூங்குகிறது
அடுக்குப் பெட்டிக்குள்..
அவள் அழகை
மெருகேற்றிய
பொன்நகையோ
பல லட்சமாம்..
பத்திரமாய் பதுங்கியிருக்கிறது
நகைப் பெட்டிக்குள்..
மஞ்சள் கயிறோடு
கோர்த்த நான் மட்டும்
எப்போதும் அவள்
நெஞ்சருகே....
பெருமையோடு
தாலி