சிந்தனைத் தேரோட்டம்

----------------------------------------

சிந்தனைத் தேரோட்டம்
*சிந்தையில் உலாவர
அலங்கரித்த சிலையாக
*அழகிய கருப்பொருள்
அனைவரையும் ஈர்த்திட
*அமைந்திட விரும்பியே
மையத்தில் உள்ளதும்
*மையல் உருவாக்க
எண்ணமது பல்லாக்கில்
*எத்திக்கும் பவனிவர
தட்டினேன் கற்பனையை
*தலைதெறிக்க ஓடியது !
---------------------------------------------
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Jul-18, 6:39 am)
பார்வை : 383

மேலே