உனக்கு தெரிந்தால்
பாசங்கள் பரவி இருக்கிறது ....
சொந்தங்கள் சேர்த்து அணைக்கிறது ...
சந்தோசம் கொட்டி கிடக்கிறது...
உறவுகள் உரிமையாய் பேசுகிறது....
ஆனால் என் மனதில் உன் நினைவுகளே....
ஊற்று எடுத்து சுரந்து கொண்டுஇருக்கிறது ....
அதை தடுக்கவும் முடியவில்லை ...
அணை போடவும் முடியவில்லை...
அப்படி என்ன தான் செய்தாயோ..
தெரியவில்லை, யோசிக்கிறேன்..
உனக்கு தெரிந்தால்
நீயே சொல்லிவிடு...