6 இசையினும் இன்பம் வேறுண்டோ - தோடி

சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 15 என்ற தலைப்பில் தோடி ராகத்தில் அமைந்த 'கொலு வமரெகதா கோதண்டபாணி' என்ற பாடலைக் கொடுத்திருந்தேன்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய 'இசைத் தமிழ்க் கலம்பகம்' என்ற நூலிலிருந்து 'இசையினும் இன்பம் வேறுண்டோ' என்ற 'தோடி' ராகப் பாடலைத் தருகிறேன்.

இசையினும் இன்பம் வேறுண்டோ - ராகம்: தோடி
('கொலுமவரெகத' என்ற மெட்டு)

பல்லவி:

இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும் (இசை)

அனுபல்லவி:

வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும்
...இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும் (இசை)

சரணம்:

மரஞ்செடி கொடிபயிர் மகிழ்ந்து முந்திவளரும்
...மருவறு நச்சுப்பாம்பும் நடஞ்செயும் நல்லபாம்பாம்
முறஞ்செவி யானையும் முதையில் மயங்கிநிற்கும்
...முளையிளஞ் சேய்முதல் மூதும்நோயும் முடிவும் (இசை)

- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-18, 12:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

மேலே