கண்டெடுத்தேன்
உன்னிடமிருந்தான
ஒரு பார்வை
அப்படியொரு
அற்புதமான பார்வை
இதயத்தில்
கொக்கியாக வந்து
மாட்டிகொண்ட பார்வை.
என் உடலிலிருந்து
அத்தனை நரம்புகளையும்
அறுத்து எரிவதை போன்றதான
பார்வை
என்னை
மரணம் தாண்டியும்
வாழவைக்கும் பார்வை.
அந்த பார்வையில்
தடுக்கி விழுந்துதான்
இந்த கவிதையை
கண்டெடுத்தேன்...