உன் நினைவும் என் நிழலும் ஒன்றுதானடி 555

என்னுயிரே...

தென்றலில் கலந்த பூவின்
மனம்போல் சேர்ந்தே இருந்தோம்...

நீரிலே இருந்தாலும் தண்ணீரில்
ஒட்டாத தாமரையை போல...

என்கரம் பிடிக்க
மறுக்கிறாய்...

வெளிச்சத்தில் வருவதும்
இருளில் மறைவதும்...

என் நிழல்
மட்டும்தான் எப்போதும்..

என்னுடன் இருக்கும்
என் நிழலை போல்...

அவ்வப்போது வந்துசெல்லும்
உன் நினைவில்...

எப்போதும்
என்னுடன் இருக்கும்...

என் நிழலும் உன் நினைவும்
ஒன்றுதானடி எனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Jul-18, 9:12 pm)
பார்வை : 447

மேலே