சட்டம்

=======
பசிக்கென்று எடுத்தவனைப் பார்த்துவிடும் போதினில்கால்
=பந்தாகத் தானெண்ணிப் போட்டு தைக்கும்
வசிப்பதற்கு வீடின்றி வீதிதனில் கிடப்பவரை
=வதைத்தெடுத்து எந்நாளும் வாட்டி வைக்கும்
புசிப்பதற்கு எலும்புகளைப் போட்டவர்க்கு வாலாட்டிப்
=பொதுமக்கள் தனைமிரட்டும் பொல்லாச் சட்டம்
நசித்திந்தத் தேசத்தின் நலங்கெடுத்து விட்டவரை
=நல்லவராய் எண்ணவிட்டு நாசம் செய்யும்.
==
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jul-18, 2:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 69

மேலே