காதல்

நதியோடு நதி சங்கமித்ததுபோல்
அவள் பார்வையும் என் பார்வையும்
சேர , பார்வையில் ஒரு சம்மதம்
நாங்கள் சந்தித்தோம் தினம் தினம்
அவள் இன்று பேசிடுவாள் என்னோடு
என்று நான், அவன் என்னோடு பேசிடுவான்
என்று இருந்தாலோ அவளும் , தெரியாது
நாங்கள் சந்தித்தோம் தினம் தினம்
பார்வையால் மட்டுமே பேசி உறவாடி

இன்று என்றும்போல் பார்வையால் சந்தித்தோம்.
இன்று அவள் கண்களில் புது நளினம் கண்டேன்.
ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்ல


சொல்வதுபோல் .......இன்று அவள் கண்கள் மட்டும்
பேசவில்லை, திறவா அவள் பவள வாய் அருகே
ததும்பி நின்றது ஒரு புன்னகை என் மனதை
அப்படியே அள்ளி அள்ளி கொள்ளைக்கொள்ள
நானும் சிரித்தேன் மிக மகிழ்ந்து

நாளையும் வந்தது அவளும் வந்தாள்,
இமைகள் திறந்த மலர்விழிகளைக்கொண்டு
என்னை தீண்டி சுண்டி இழுக்க,
என் மனதையும் பார்வையால் சிறைவைக்க,
ஒரு மயக்கத்தில் நான் இருக்க, மீண்டும்
அவள் தந்தாள் ஓர் இன்ப அதிர்ச்சி,ஆம்
இவளென்ன ஒருவேளை பேசாத மடந்தையோ
என்று நினைக்கையிலேயே பவளக்கொடிபோல்
அசைந்து வந்தாள் .......மெல்ல மெல்ல இப்போது

அவள் மதுரஇதழ்கள் விரியும் தாமரை மொட்டாய்
விரிந்து ...........காதல் மொழி தந்து முதல் முதலாய்
'அன்பே' என்று அவள் கூறிட புல்லரித்தது
என் உடலெல்லாம், காதல் தந்த சிருங்கார
அதிர்ச்சியால்......நானும் அவளை இப்போது
பண்போடு நெருங்கினேன், 'அமுதே' என்றேன்
தென்றலாய் அவள் வந்தாள் என் விரி
கைகளுக்குள்.....இப்போது என் அரவணைப்பில்
அவள் .......இருவருக்கும் சொந்தம் இந்த சுகம்;

மௌனமொழியால் பேசிட நினைத்தாளோ முதலில்,
காதலுக்கு பேசுமொழியே சிறப்பு என்று பிறகு
தோன்றியதோ நங்கை அவளுக்கு,இன்று,

பார்வையால் பேசி, இதழ்கள் திறந்து
சிரித்து, செவ்வாயும் திறந்து காதல் மொழிந்து
அப்பப்பா...........என்னை காதல் எல்லைக்கு
கடத்தி சென்றுவிட்டாளே........இன்ப கோட்டைக்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-18, 6:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 213

மேலே