உன் நினைவுச் சிறையில் நான்

நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி நீ
அதில் உன்
முகம் மட்டுமே தெரிகிறது!

நான் தேடும்
விடியல் நீ
இன்னும் இருளே
எனதுலகத்தில்!

வானிலுள்ள
நட்சத்திரங்களைப்
போன்றது உன்
நினைவுகள்!

நான் கண்டுகளிக்கும்
நிலவு நீ
உன்னை என்னால்
அடைய இயலவில்லை!

எத்திசையில் நீ
சென்றிருக்கிறாய்!
நான் வழிதனை
தேடிக்கொண்டிருக்கிறேன்!

நீ நதி
உன்னில் விழுந்த
சருகு நான்
உன் பாதை எனக்கு
புலப்படவில்லை!

புதிரான
கேள்வி நீ
அதற்கான பதிலைத்
தேடும்
முயற்சியில் நான்

உன்னை
நேசமென்னும்
சிறையிலடைக்க முயன்று
தோற்றுப்போகிறேன்!
உன்
நினைவுச்சிறையில்
நானிருப்பதால்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (7-Jul-18, 5:12 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 751

மேலே