காதலர்கள் கவனத்திற்கு பகுதி 12
உன் விரல்கள் தவழ்ந்த
கவிதைத் தொகுப்பை
எதார்த்தமாகத்தான் புரட்டினேன்
ஏதேதோ எழுதச் சொல்கின்றன
மஞ்சள் குளித்த வார்த்தைகள்
“நம் நட்பைக் காதலென
சந்தேகிக்கிறாள் என் தோழி” என்கிறாய்
நான் சமாளித்து புன்னகைக்கிறேன்
கைகொட்டி சிரிக்கிறது காதல்
இயற்கையின்
ஆழகான தப்புக் கணக்கு
உன் ஆறாவது விரல்