காதலர்கள் கவனத்திற்கு பகுதி 11
எந்தக் கவிதையிலும்
எழுதிவிடமுடியாது
புளிப்பில் கூசும்
அவள் முகத்தின் அழகை
அவள் புன்னகையைப்
பதிவுசெய்தேன் புகைப்படத்தில்
ரசிக்க மறந்து...
இனிப்பைப் படம் பிடித்துஎன்ன பயன்?!!
சாளரம் வழியே வேடிக்கை பார்க்கிறேன்
கும்மாளமாய் நீயும் மழையும்
நனைந்த மகிழ்ச்சியில் நீ
நனைத்த மகிழ்ச்சியில் மழை
எந்தப் பூவிலும்
இந்த மென்மையில்லை
இன்னொருமுறை தொடு