நேரிசை வெண்பா-கனிவு கொடுக்கும் காற்று

புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.

=========================
கனிவு கொடுக்கும் காற்று=2
=========================

ஏற்றம் பெறவாழ்வில் என்றும் உழைப்பாளாம்.!

ஆற்றங் கரையில்.! அவள்வியர்வை - ஆற்றவரும்

நாற்றங்கால் தென்றலும் நல்மணக்கும் வாடையிலே

காற்றதுவும் தந்த கனிவு.!

=====================================

*ஒரு விகற்ப (எதுகை) நேரிசை வெண்பா*

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (8-Jul-18, 8:02 pm)
பார்வை : 58

மேலே