நேரிசை வெண்பா-விவசாயி

புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா.

விவசாயி
=========

சுருக்குக் கயிறால் சுழற்றி அடிப்பாள்

கருக்கா விலகக் கதிரை.! - விருப்பமுடன்

செய்கின்ற உத்தமச் செய்கை விவசாயம்.!

செய்யும் தொழிலே சிறப்பு.!

=============================

*இரு விகற்ப நேரிசை வெண்பா*

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (11-Jul-18, 1:05 am)
பார்வை : 56

மேலே