காதல் கொண்டேன்
ஆம்.... காதலுக்கு கண்கள் இல்லை தான்...
ஒருவேளை இருந்திருந்தால்...
உனக்காக நானும்
தனிமையை உரிமையாக்கி
காத்து கொண்டிருக்க மாட்டேனே!!
உன் சோகம் - எனது
அழுகையின் கரணம் ஆகியிருக்காதே!!!
நீ வேறு பாவையின் விறல் தொட - நான்
பொறாமை கொண்டிருக்க மாட்டேனே!!
உன் ஒரு வார்த்தை கேட்டிட - உன்
பின்னால் சுற்றியிருக்க மாட்டேனே!!
உன்னோடு நடக்கவும் பேசவும் காரணம் தேடியிருக்க மாட்டேனே!!
உன் மூச்சு காற்று பட வெட்கம் தன்னை போர்த்தியிருக்க மாட்டேனே!!
உன்னை பற்றி நினைக்க சுகம் கண்ட இதயம் - இன்று வலிக்குதுடா!
தனிமையில் நானும் புலம்புகையில்!!
உன் முன்னே நானும் சிரிப்பது போல் நடிக்கையில்!!
தோழியிடம் என் சோகத்தின் காரணம் சொல்ல
பொய்களை தேடுகையில்!!!
என் காதலை மறைக்க மரணிக்க என்னுகையில்...
காதலா!!!
நீயும் குருடன் ஆனாயோ?
என் காதலை மிதித்து போகையிலே!!!!