மது மயக்கம் வேண்டாம்
மின்னல் வேகத்தில் ஒரு வேகம்.
கூர்மையான அறிவு.நெஞ்சையள்ளும் அழகு ஆனாலும் அவள் ஏழை.
பெயர் சிவகாமி விடிவதற்கு முன்னே வீட்டை விட்டுப் போனவள் இரவின் அனுமதியோடு வீட்டின் வாசலை நெருங்குவாள்.
அப்படி என்ன வேலை செய்கிறார் குடிசையின் உள்ளே நாமும் செல்வோம். முதுமைப் பருவம் அடைந்த தம்பதியர்கள் அவர்களுக்கு ஒரு குடிகார மகன்.
அந்த மகனின் மனைவி சிவகாமி. தன் புகுந்த வீட்டிற்கு ஆக தினமும் உழைப்பவர் தினம் தினம் உழைப்பவர். குடி ஒன்றே தன் பழக்கமாக வைத்துக் கொண்டு எந்த வேலைக்கும் செல்லாத கணவன்.
டாஸ்மார்க் கடை வாசலில் காவல் காக்கும் கணவனின் நிலையை அவள் வருத்தப்படாத நாட்களே கிடையாது வீட்டைத் தன் அத்தை மாமா பார்த்துக் கொள்வர்.
அப்படி என்ன வேலை காலையில் இருந்து கட்டடங்களுக்கு மண் சுமந்து கல் சுமந்து 5 மணிக்கு மேலே பிரியாணி கடை பாத்திரங்கள் கழுவி பின் வீடு திரும்ப பால் வரும் வார சம்பளம் முதியவர்களின் மருந்து செலவு உடல் நலத்திற்கு போதுமானதாக இருக்காது பின் குடும்ப பாரம் அனைத்தையும் சுமக்கிறாள். இதில் தன் கணவர் அடித்து உதைத்து பணம் வேண்டும் எனும் கஷ்டப்படுவார்.
இவர் சிறிது காலம் போய்க்கொண்டே இருந்தது ஆறு வருட காலத்திற்கு பிறகு தன் அத்தையை இழந்தால். அடுத்த ஆண்டு தன் மகனையும் இழந்தாள்.
இப்போது கணவன் மட்டுமே துணை வேறு எவரும் இல்லை பிள்ளைகளும் கிடையாது. வேலைக்குப் போக முடியாத சந்தர்ப்பம் திடீரென்று சிவகாமிக்கு காய்ச்சல் மூன்று நாட்களாக வீடு திரும்பாத கணவன் திடீரென்று மது மயக்கத்தில் தள்ளாடி கொண்டு வீடு திரும்பினான். மூன்று நாட்களாக தண்ணீர் கூட கொடுக்காத நிலையில் பசி மயக்கத்தில் காய்ச்சலுடன் படுத்திருந்த சிவகாமி என்னவென்று கூட கேட்காது. மது மயக்கத்தில் அவளை அடித்துவிட்டு மயங்கினான்.
சிவகாமிக்கு யாருமே கிடையாது. பசி மயக்கத்தில் இருந்த திடீரென நினைவு வந்தது என்ன ஆனது என்று தெரியவில்லை வாயில் ரத்த வடிய உயிர் பிரிந்தது.அருகே கணவன் இருந்தும் பயனில்லை அவன் குடி மயக்கத்தில் இருந்தான்...
விடியற்காலையில் உணர்ந்தான். குடி மயக்கத்தில் இருந்த தெளிந்தவனுக்கு யாருமில்லை...
குடி மிகவும் ஆபத்தானது ......
உணரவில்லை என்றால் எல்லாவற்றையும் இழந்து நிற்க வேண்டியதுதான் ..........