உனக்காக ஒரு இதயம்

இதயமே
காத்திருக்கிறேன்
உனக்காக..

கதிரவன் மறைகிறான்
வானம்
கருமை பூசுகிறது
பறவைகள்
கூடு திரும்புகிறது
வின் மீன்கள்
வருகை தெரிகிறது
உன் வரவு மட்டும்
தெரியவேயில்லை
விடியும் வரை
காத்திருப்பேன்
ஏன் என்றென்றும்
என் ஆயுள் முடியும் வரை
காத்திருப்பேன்
இது உனக்காகவே
பூத்திருக்கும் இதயம்
வா அன்பே
உன் மௌனத்தை
கலைத்துவிட்டு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jul-18, 9:14 am)
பார்வை : 795

மேலே