மனக்கண்ணாடி

நான் ஒரு பைத்தியமென
என் மீது சொற்கற்களை
எறிகின்றீர்..!
நான் ஒரு முட்டாளென
என்னை முட்களால்
அலங்கரிக்கின்றீர்..!
நான் ஒரு துரோகியென
என்னை துரத்தியடிக்கின்றீர்..!
சுயத்தை தொலைத்த என்னைத்தான்
சுயநலவாதியென்கின்றீர்..!
கொஞ்சம் நிதானமாக
கவனியுங்கள் என்னை..
நான் உங்களின்
மனக்கண்ணாடி..!