யாசகத்தில் உயிர்

பசி கொல்ல தின்ற உணவு
பல வகை ருசியானது ,
உடல் வளர்த்த உணவே
உயிர்குடிக்கும் நஞ்சானது,.
நஞ்சென்று சொன்னதெல்லாம்
நவீன மருத்துவத்தில் நோய்தீர்க்க மருந்தானது .
உணவும் மருந்தும் இணை பயணம் ஆனது,
உடலோடு உயிரோடும் .,
வறுமையில் யாசித்தோர்க்கு
அன்னதானங்கள், ஆடை தானங்கள் போய்,
பிணியினில் பீடித்தோர்
கண்தானம் தொடங்கி..
கல்லீரல் தானம் வரை ...
உடலுறுப்பு வேண்டி
உயிர்காக்க , உயிர்நீதோரிடம் யாசித்து ..
பிரிந்த உயிர் புது உடல் வேண்டி யாசித்தாலோ ,
பிரிந்த உடல் புது உயிர் வேண்டி யாசித்தாலோ ,
யோசிக்க ஒன்றும் இல்லை
என்று தோன்றும் .

எழுதியவர் : (10-Jul-18, 1:09 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே