வாங்கி வந்த வரம்

மேகம் இல்லா
வெற்று வானம் -இவன்,
அழகு நிலவு தீண்டா
அம்மாவாசை இருள் …
பூத்து உதிர்ந்து பூ இல்லா
ஒற்றைச்செடி -இவன் ,
வான்மழை தழுவா
வறண்டு வாடும் மண் ..!!
இவன் வாங்கி வந்த வரம் ,
பிறரை ஏற்றி விட்டு
ஏக்கத்தோடு பார்க்கும் ஏணி,
தவிப்போரை கரை சேர்த்துவிட்டு
கரையோரம் தவிக்கும் தோணி !!
தாய் இருந்தும்
தாலாட்டு கேட்காத சேய்,
நன்றி இருந்தும்
கல்லடி படும் நாய் !!
இவன் வாங்கி வந்த வரம் ,,
பொழுது போக பிறர் தூக்கி
விளையாடி எரிந்த பொம்மை ,
பாவம் என்றுணராமல் பிறர் பொய்
பாசம் காட்டியது மட்டுமே உண்மை !!!
கருவோடு உருவாகி
அத்ரிஷ்டம் இல்லாமல் பிறந்த தொல்லை ,
தாய் பாசம், தீண்டாமல் இவன்
துடிக்கும் துடிப்பிற்கு வானமே எல்லை ,
பாழாய்ப்போன அந்த மரணத்திற்கு
கூட இவனை பிடிக்காததே பெரும் கவலை !!!
இவன் என்றும்
கண்ணீருடன் உறவாடும் பிள்ளை
என்றும் ...என்றென்றும் …
ஜீவன்