தெருக்கூத்து கலைஞன்
இவனும் கலைஞன்
திறந்த வெளியே
இவன் அரங்கம்
கிராமத்து பாமரர்
இவனுக்கு பார்வையர்
இரவு முழுவதும்
இவன் குழு
ஆடி, பாடி
பெரும் வசனங்கள் பேசி
பாரதம், ராமாயணம்
கதைகளை அரங்கேற்றுவர்
இவர்கள் தெருக்கூத்து கலைஞர்
விடியும்வரை இவர்கள் நாடகம்
வெள்ளி முளைக்க முடிந்துவிடும்
இத்தனை ஆத்மார்த்த உழைப்புக்கு
இவர்கள் பெரும் சன்மானம்
அன்று இரவு கிராமத்தார்
கலந்தளிக்கும் சில நூறு ரூபாய்தான்
எதையுமே இலட்சியம் செய்யாது
இன்றும் காத்துவருகின்றனர்
இவர்கள் இந்த தெருக்கூத்து கலையை
இதோ இப்போது பார்த்துவிட்டு வருகிறேன்
'பாஞ்சாலி சபதம்' தெருக்கூத்து
எங்கள் கிராமத்தில் ...........
பக்கத்து சினிமா கொட்டகையில்
இரவு ஆட்டம் முடிந்து மக்கள்
திரும்புகின்றனர், சினிமா
'கரகாட்டக்காரன்'!- இது சினிமா
நடிகருக்கு இங்கு லட்சத்தில் அல்லது
கோடியில் சன்மானம்.....
கரகாட்டக்கார நடிகன்
'காரில் திரும்புகிறான் வீட்டிற்கு
தெருக்கூத்து கலைஞன் மரத்தடியில்
தூங்கிவிட்டு, காலை முதல்
பஸ்சில் வீடு திரும்புவான்.
வாழ்க்கையில் இப்படி ஏற்றத்தாழ்வுகள் !