மார்பில் உப்பிட்டு

மார்பில் உப்பிட்டு

உன்னைத் தழுவித் தழுவித்
திளைக்க மட்டுமா என் தோள்?
நீ சோர்ந்த நேரம் சாயவும்
இதுதான் வலிய, ஆனால்
உனக்கு வலிக்காத தூண்.
உன் கண்ணீரால் மார்பில்
உப்பிட்டு நனைக்காதே!
உள்ளளவும் நினைக்கக்
காரணம் வேறு தேவையா?

எழுதியவர் : திருத்தக்கன் (10-Jul-18, 2:50 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
பார்வை : 124

மேலே