பிரிவில் அவள் நினைவு

ராஜபோக படுக்கையில் சயனித்தாலும்
ராத்தூக்கம் வருவதாயில்லை

தலைகோதி விடும்கைகளின் தந்திரத்தை
தலையணை அறிந்ததாயில்லை

பட்டுடலாளின் சொக்கும் தழுவலோ
எட்டுமுழ போர்வைக்கில்லை

கொஞ்சும் அவள்குரலின் மயக்கமோ
சங்கீதம் எவற்றிலுமில்லை

புனைந்தகவியை புரியசொல்லி பரிசுபெற
புன்னகைமொழியாள் பக்கமில்லை

எழுதியவர் : (10-Jul-18, 9:53 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 74

மேலே