காதலின் கடைசி இரவு

மரணத்தின்
மொழியொன்றை
வார்த்தையாக்கி
நின்று கொண்டிருந்தேன்.

போதை தீராத
என் மதுக்கோப்பையில்
நமது காதலின் கடைசி
இரவொன்றை ஊற்றுகிறாய்.


விடியும் வரை
இரவை கோப்பையில்
ஏந்தியபடி
அமர்ந்திருக்கிறேன்...

பகல் மலர்தனில் போது
ஈரக்காற்றாய்
ரீங்காரமிடும
நினைவுகளை தவிர
ஒன்றுமில்லை.

எழுதியவர் : (11-Jul-18, 4:55 am)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 57

மேலே