நீயின்றி

பேருந்துப் பயணத்திலும்,,.,
பரவும் பனிச்சிதறலிலும்..,
மழைச்சாரலின் கடுங்காற்றிலும்...,
அனைவர் இமைகளின் விளிம்புகளில் உறக்கம் எட்டிப்பார்க்க..,
நான் மட்டும் உணர்ந்தேன்...,ஏதோ வெறுமையை...!,
நீயற்ற கணங்களின் வெற்றுத்தாள்களை எப்படி நிரப்பும் என் நாட்குறிப்பு...!
உன் உரையாடலற்ற நாழிகைகள் என்னோடு வரமறுக்கிறது...,
உன் வருகையின்றி வாடிப்போனது என் தமிழ் விசைப்பலகையும் அதன் சித்திர எழுத்துக்களும்..!

எழுதியவர் : சரண்யா (11-Jul-18, 6:00 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : neeyindri
பார்வை : 430

மேலே