இனியாவது மாறுவோம்

எமது பாரதநாட்டின் தனித்துவமானவளாய் விளங்கும் பெண்மணியே உம்மை வணங்கி பெருமிதம் கொண்டு இக்கதையை துவக்கிறேன் . கவிபாடும் கண்களோடு,இரும்பினிக்கும் இதழ்களோடு, உன் அழகிய சுளிக்கும் உதட்டினைக் கொண்டு, ஒலிக்கும் வளையல் கொலுசு இசையினையில் மூலம் தேவதை போல் காட்சியளிக்கும் பெண்னே !!!

சிறுவயதில் இருந்தே பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தனது குழந்தை பருவத்திலே பலரின் ஆக்கத்ததால் காம ஆசைக்கு தள்ளப்படுகிறாள்.
அறிவினை பெறுவதற்கு பள்ளிக்கு சென்றால், மதிப்பெண் காரணம் காட்டிஆசிரியர் அரவணைக்கிறான்.
நியாயம் கேட்டு காவலரிடம் சென்றால்,அவன் அநியாயம் செய்கிறான்.
கண்ணீர் சூழ கடவுளிடம் கேட்டால், ஆண்டவன் பெயரில் பூசாரி அசிங்கம் செய்கிறான்.
வேலைக்கு சென்றால், ஊதியம் காரணம் கூறி அவனும் அணைக்கிறான்.


பெண்னே!!!!
மதிப்பெண்ணுக்கு பயந்து உன் பெண்மை இழக்காதே! ,உன் வீரத்தை ஊனமாக்காதே,! வீறுகொண்டு எழுந்து வா, இனியாவது நாம் மாறுவோம் , விரமாய் செயல் படுவோம்.


மாதவிடாயின் பொது பெண்களை கோயில்களுக்கு செல்ல தடை செய்கிறார்கள். ஆனால் கோவில்களிலே இருந்து பணிபுரியும் பெண்களை மட்டும் உள்ள அனுப்புவது சரியா? இருப்பினும் கோவில் உள்ள இருக்கும் சாமியே பெண் தானே ?.இந்த சமூகம் இன்று வரை மாறாமல் அப்படியே தான் இருக்கிறது .இதனாலே பெண்கள் சிலர் மாதவிடாய் பற்றி பேசுவதை அருவருப்பாகவும், அவமானமாகவும் நினைக்கின்றன. நாம் எப்போது தான் அவர்களை பற்றி புரிஞ்சி நடந்து கொள்வோமா?. அகத்தில் நடக்கும் செயல்களுக்கு புறத்தில் குறை கூறும் இந்த சமூகமே இருளில் தான் சூழுந்துள்ளது. பெண்களின் உணர்வுகளை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆண்மகனது கடமையாகும். இந்த இருளினை நிக்கி அவர்களை வெளிச்சத்தில் கொண்டு வர இனியாவது நாம் மாறுவோம், புது மாற்றத்தினை கொண்டு வருவோம்.

அதிகாலை விரைவாக எழுந்து சமையல் செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவனுக்கு உணவளித்து விட்டு, பின்பு வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து விட்டு,பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வந்து உணவூட்டி, பின்பு இரவுக்கு சமையல் செய்கிறார்கள். இவர்கள் சாப்பிட்டு தூங்கவே இரவு வெகு நேரம் ஆகிறது. , இது ஒரு சுழற்சி செயல்முறை.அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது மிகவும் கடினமான செயலாகஇருக்கும். சாதுர்த்தியமும்,சாமர்த்தியமும் பெண்களுக்குரிய அறிய குணமாகும்.கணவன்மார்கள் சிலர் போதை பழக்கத்தின் ஆதிக்கத்தால் தன் மனைவிமார்களை துன்புறுத்துகின்றனர் .பெரும் மனஅலைச்சலுக்கு ஆளாகின்றனர். வாழ்கை நினைத்து பெரிதும் கவலைப்படுகின்றன. ஆண் வீரத்திற்கு , பெண் சாபத்திற்கு என்று பாகுபாடுயோடு படைத்துளார்களா ??.விழித்துக்கொள்!! சிறைப்பட்டிருந்த காலங்கள் போதும்?.இனியாவது நாம் மாறுவோம் ,பெண்ணின் பெருமையினை உலகிற்கு எடுத்துரைப்போம்.

எழுதியவர் : manikandan karunanithi (10-Jul-18, 10:20 pm)
சேர்த்தது : mani
பார்வை : 354

புதிய படைப்புகள்

மேலே