நேரிசை வெண்பா-சாலை விரிவாக்கம்

புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா

சாலை விரிவாக்கம்
==================

விண்ணின் கொடையாக வீழ்ந்த அழகெலாம்

மண்ணின் அடியில் மடிந்தது - எண்ணற்றோர்

இங்கே நிலத்தை இழக்கும் நிலையது

மங்காமல் தங்கிடும் மாசு.!

=============================

*இரு விகற்ப நேரிசை வெண்பா*

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (11-Jul-18, 1:31 am)
பார்வை : 43

மேலே