நேரிசை வெண்பா-பஞ்ச பூதத்தைப் பணி
புலனத்தின் குழு ஒன்றில், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்துக்கு, ஒரு தமிழ் மூதறிஞர், வெண்பா வித்தகர், வார்த்தைச் சித்தர் ஒருவர், அப்படத்திற்கு ஒரு நேரிசை வெண்பா எழுதுக என விண்ணப்பித்திருந்தார். அனேக கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். கொடுத்த படத்துக்கு ஏற்ப எழுதிய வெண்பா
பஞ்ச பூதத்தைப் பணி
===================
மண்ணுயிர் வாழநீர் மண்ணும் அவசியம்.!
விண்ணுடன் காற்றுமதில் வேண்டுமாம்.! - அண்டத்தில்
பஞ்ச மிலாமல் பயனள்ளித் தந்தருளும்
பஞ்சபூ தத்தைப் பணி.!
===============================
இரு விகற்ப நேரிசை வெண்பா