உன்னால் நானும் கவிஞ்சனாய் ஆனேன்

உன் முதல் சந்திப்பு
அதுவே என் கவிதையின் முதல் தலைப்பு...
உன்னைக் கண்ட கனமிருந்தே கர்ப்பம் தரித்துவிட்டேன்
என் இதயத்தில் ஒரு கவிஞ்சனாக...
உன்னை சந்தித்ததிலிருந்து நீ என்னிடம் பேசிய சொற்களையெல்லாம்
சேமித்து வருகிறேன்
அதுவே இன்று என் கவிதைகளின் தொகுப்புகளாய் தேங்கிக்கிடக்கிறது...
அண்ணார்ந்து பார்க்கும் ஆகாயத்திலும் சரி,
புழுதி படும் பூமியிலும் சரி புதிதாய் ஒன்றையும் கண்டதில்லை
ஆனால் உன்னைக்காணும் ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொன்றாய் தெரிகிறது புதிதாய் ஒன்று...
காதலிக்கும் போது தனியாக தெரிந்தாய்
கலியாணத்தின் பின்பு தெரிவதெல்லாம் நீயாகவே தெரிகிறாய்...
ஒவ்வொரு இரவுகளின் தனிமையும் ருசிக்கிறது
நீ இல்லாத போது
முழு இரவே ருசிக்கிறது என்னோடு நீ இருக்கும் போது...
என் இறுதி உறக்கத்தில் என் தலையின் பாரம் சுமக்காதோ உன் மடி
என்றே என் ஆயுள் தொடர்கிறது..
இருக்கும் வரை இன்னும் வேண்டும் உன் இதயத்தில் இடம்
இறுக்கம் கொடு இரக்கம் தருகிறேன்...