கடவுளுக்கு ஒரு கடிதம்
இறைவா......
என் தாயின் உடல் முழுதும் பற்றி எரிகிறது
அவள் ஐவிரல் பிரித்து அழகு பார்த்தாகிவிட்டது
நரம்புகள் அறுத்து அண்டை நாட்டோடு நட்பு
பாலம் போட்டாகிவிட்டது....
அவள் உத்திரங்களை அந்நிய குளிர்பான
கம்பெனிகள் உறிஞ்சிக்கொள்ள உத்தரவு கொடுத்தாகி விட்டது ...
அவள் அங்கங்களிலல்லவா எங்கள் அரசியல் நாடகங்கள் அரங்கேறுகிறது....
இருந்தும் தைரியமாக சொல்லுவோம்
இந்திய நாடு என் தாய் திருநாடு....