கடல்

ஓயாமல் துடித்து கொண்டிருக்கும் அலைகள்
அதில் தெரியாமல் அடித்து கரைசேரும் சங்குகள்
நிற்காமல் நீந்தி கொண்டிருக்கும் மீன்கள்
அதை பிடிக்க பின் தொடரும் சுறாக்கள்
அழகிலும் ஆபத்தை கொண்டிருக்கும் பாறைகள்
ஆபத்தையும் அழகாய் மாற்றிய நீ
இயற்கை அன்னை அளித்த வளர்ப்பு அன்னை
அலைகள் ஓய்வதில்லை
சங்குகள் உடைவதில்லை
மீன்கள் மாட்டுவதில்லை
சுறாக்கள் ஏமாறவும் இல்லை
பாறைகள் ஆபத்தையும் காட்டவில்லை
அழகையும் மறப்பதில்லை
ஆயிரம் அதிசயத்தை உள்ளேயே வைத்துக்கொண்டு
வெளியே மறைத்து விட்டாய்
உன்னால் மட்டும் இது எப்படி முடிகிறது??

எழுதியவர் : புவனேஷ்வரி (13-Jul-18, 1:02 am)
சேர்த்தது : bhuvaneshwari
Tanglish : kadal
பார்வை : 128
மேலே