காவிரி தாயே---பாடல்---

பல்லவி :

காவிரி தாயே - எங்கள்
கண்களில் வழிகின்றாயே... (2)

வானம் பார்த்த பூமி இன்னும் இங்கே
காஞ்சு போயி கெடக்குது... (2)
ஆத்தில் நீயும் வல்ல மூச்சுக் காத்தும்
ஓஞ்சு போக துடிக்குது... (2)

காவிரி தாயே...

சரணம் 1 :

யார் யாரோ?... வந்து சென்றும்
நீவர இங்கு வழியில்லையே...
கார்மேகம் பெத்த உன்னை
தந்திட இன்றும் மனமில்லையே... (யார் யாரோ?...)

நெல்லைத்தான் பிள்ளை போல
நாளும் வளர்த்தே காத்து வந்தோம்...
வெப்பத்தால் வாடும் நெல்லை
காணும் பொழுதே தேகம் வெந்தோம்...

தோட்டம் வைத்த காய்களுந்தான்
சற்றும் விளையலையே... விளைந்தால் விலையில்லையே... (2)

பூமி எங்கும் வண்ண மாடி பூக்குதே...
சாமி எல்லாம் கண்ண மூடி நிக்குதே... (பூமி...)

காவிரி தாயே...

சரணம் 2 :

தீர்வொன்றை தந்த பின்னும்
வாரியம் மட்டும் கனவாகுதே...
தேர்தலையே எண்ணிக் கொண்டு
ஏய்ப்பதால் நெஞ்சம் கனலாகுதே... (தீர்வொன்றை...)

சந்தேகம் என்று சொல்லி
காலம் கடந்தே நாடி வந்தார்...
சந்தோசம் எம்மை விட்டு
தூரம் பறந்தே ஓட வைத்தார்...

சேத்தில் பூக்கும் உயிர்களுக்கு
சித்தம் தெளிவில்லையே... தெளிந்தும் நடிக்கின்றதோ?... (2)

நீதி ஒன்று இன்னும் நீண்டு செல்லுமோ?...
மீதி உயிரும் மண்ணில் மாண்டு போகுமோ?... (நீதி...)

காவிரி தாயே...

எழுதியவர் : இதயம் விஜய் (13-Jul-18, 11:43 am)
Tanglish : kaaviri thaayaye
பார்வை : 1848

மேலே