எட்டு வழிச்சாலை---பாடல்---

வளர்ச்சி என்று நிலத்தினைக் கேட்கும்
திட்டம் தேவையில்லை...
வளர்த்த மண்ணை இழப்பது போன்ற
துன்பம் ஏதுமில்லை...
பல்லவி :
எட்டு வழிச் சாலையாலே
வேகுதம்மா எங்க உசுரே...
கெட்டு வரும் ஆட்சியாலே
நோகுதம்மா எங்க மனசே...
நீங்காதோ?... நீங்காதோ?...
அழிவைக் கொடுக்கும் மிருகங்கள்...
தாங்காதே தாங்காதே
உழைக்கத் துடிக்கும் இதயங்கள்...
வரும் வலி எது என்று தெரியாத கூட்டமா?...
பெரும் பலி அது என்று புரியாது கேட்டமா?... (வரும்...)
எட்டு வழி...
சரணம் 1 :
நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி
ஒழச்சு ஒழச்சு நாங்க பொழச்சோம்...
பத்து யானை பலத்தக் கொண்டு
நெலத்தப் புடுங்க நாங்க தவிச்சோம்...
போரடிச்சு பொங்கல் வச்சு
இறை வாசல் வேண்டி சென்றோம்...
போராட ஒன்று சேர்ந்தால்
சிறை வாசல் கூட்டி சென்றான்...
ஞாயமா?... இது ஞாயமா?...
பதில் கேட்டால் அநிநாயமா?...
காஞ்ச பூமியில கண்ணீர பாச்சி வெள்ளாம போட்டால்
காலில் செருப்போட ஒன்றாக வந்து கல்லத்தான் நட்டால்
எங்க மனம் கொதிக்காதோ?...
எங்க நெஞ்சத்தான் மிதிக்காதே... (எங்க...)
எட்டு வழி...
சரணம் 2 :
மண்ண காக்கும் மரத்த வெட்டி
மலையைக் கொடஞ்சும் சாலை அமைத்தால்...
எங்க வாழ்க்கை மழையும் இன்றி
வறண்டு கெடக்க மேலும் இறப்போம்...
சாபமொன்றை கொண்டு வந்து
விலைவாசி ஏற்றி வைத்தான்...
சோலையித வாங்கிச் செல்ல
விலைபேசி ஆளைக் கொல்வான்...
மாறுமா?... இது மாறுமா?...
இனி வாழ்வோ?... தடம் மாறுமா?...
வாழும் வாழ்க்கையில சோகத்தை நீக்கி
சந்தோசம் சேர்த்தால்
ஆளும் அதிகாரம் பாம்பாக தோன்றி
நஞ்சத்தான் வார்த்தால்
எங்க இனம் எதிர்க்காதோ?...
எங்க வாழ்வத்தான் அழிக்காதே... (எங்க...)
எட்டு வழி...