உயிர் கிழித்து
கனவுகள் திரட்டி சிதைவுகள் விரட்டி
உணர்வுகள் கூட்டி உறவுகள் மீட்டி
பெண்ணே என் உயிருக்குள் நுழைந்தாய் !
உடல் கிழித்து உயிர் வெளிவந்தபோதும்
உயிர் கிழித்து நீ ஏன் பெண்ணே
வெளிவரவில்லை...
ஊசலாடிக்கொண்டிருக்கிறேன் நான்
உன்னை சுமந்துக் கொண்டு
காற்றில் கலந்த பின்பும் ....!